காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள்.



தமிழில் காளமேக புலவர் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் இவரைப்பற்றி சில சுவையான செய்திகள் உலவுகின்றன. இவர் சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்று தெரிகிறது

ஒரு சமயம் காளமேக புலவர் காஞ்சிபுரம் சென்றிருந்தார். மத்தியான நேரம். பசி வயிற்றைகிள்ள அங்குள்ள ஒரு சத்திரத்தில் படுத்திருந்தார்.
அப்போது அங்கு படுத்திருந்த வேறொரு பக்தர் சத்தமாக ‘ காஞ்சி வரதப்பா என்று உரத்த குரலில் காஞ்சி வரதராஜ பெருமாளை அழைத்து கும்பிட்டார்.பலரும் இது போல் தன் இஷட தெய்வங்களின் பெயரை அடிக்கடி விளிப்பது வழக்கம்.

இதை வயிற்று பசியுடன் படுத்திருந்த காளமேக புலவர் காதில் ‘கஞ்சி வரது அப்பா என்று விழ, அவர் யாரோ கஞ்சி கொண்டு வருகிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக எழுந்து “எங்கே வரதப்பா? என்று கேட்டார்.

கஞ்சி வரவில்லை என்று அறிந்து அவர் மெதுவாக தெருவில் நடந்து போனார். அப்போது அங்கு சில சிறுவர்கள் விலையாடி கொண்டிருப்பதை பார்த்த காளமேக புலவர், அவர்கள் அருகில் சென்று 

“சோறு எங்கே விக்கும்?" (பசியுடன் இருந்ததால் இலக்கண தமிழில் கேட்க முடியவில்லை. விற்கும்= விக்கும் என்றாகி விட்டது.) என்று கேட்க, அந்த கூட்டத்தில் ஒரு  குறும்புக்கார சிறுவன்

 “சோறு தொண்டையில் விக்கும் என்றான்.

பயங்கர கோபம் வந்து விட்டது புலவருக்கு. ஒரு கரி துண்டை எடுத்து பக்கத்தில் இருந்த சுவற்றில் ‘பாக்கு தெரித்து விடும் பாலர்க்கு .. என்று ஒரு கவிதை எழுதின உடன் கோவிலில் சாப்பாட்டு மணி அடித்து விட்டது. கவிதையை சாப்பிட்டு வந்து முடித்து விடலாம் என்று போய் விட்டார். அவர் எழுதி முடிக்க  நினைத்தது “ நாக்கு தெரித்து விழ நாகேசா என்று. ஆனால் அதைப்படித்த அந்த சிறுவன் அதை மாற்றி எழுதி விட்டு போனான். 

இது போல் ஒருமுறை புலவர் ஒரு வயல்வெளி வழி போய்க்கொண்டிருந்தபோது ஒரு உழவன் மாட்டை ஓட்டிக்கொண்டு உழுதுகொண்டே பாடிக்கொண்டிருந்தான். 

அவன் பாடியது 

“மூங்கில் இலை மேலை தூங்கும்.." என்றபோது அவன் மனைவி தலையில் கஞ்சி கலத்துடன் வந்து விட்டாள். உழவனும் உழுவதை நிறுத்திவிட்டு சாப்பிட போய்விட்டான்.

புலவருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. மூங்கில் இலை மிக சிறிதாக இருக்குமே அதில் எப்படி ஒரு ஜந்து தூங்க முடியும் என்று மண்டை குடைய அங்கேயே உட்கார்ந்து முழு பாட்டையும் கேட்டு விட்டு போகலாம் என்று இருந்து விட்டார்.

உழவனும் சாப்பிட்டு மனைவியை கொஞ்சி கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப வந்து உழ ஆரம்பித்தான். திரும்பவும் பாட ஆரம்பித்தான்.

“மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வங்கும் கதிரோனே

என்று பாட ஆரம்பித்தான். அப்போது தான் புலவருக்கு மூங்கில் இலையில் யார் தூங்கியது என தெரிந்தது.

காளமேக புலவரைப்பற்றி இன்னும் பல ஸ்வாரஸ்யமான செய்திகள் உனண்டு ஆனால் பலதும் மறந்து விட்டது.

Comments